Published on 03/11/2025 by Administrator
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யாளகுடா பகுதியில் தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24) மற்றும் மாருதி ராவின் மகளான அம்ருதா இடையே காதல் நிலவியது. எனினும், பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி பிரனாய் மற்றும் அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில், கோபமடைந்த மாருதி ராவ், பல முறை பிரனாய் மீது தாக்குதல் முயற்சிகள் செய்தார்.
2018 செப்டம்பர் 14-ல், பிரனாய், அம்ருதா மற்றும் தாயுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, மிரியாலகுடாவில் கொலையில் ஈடுபட்டார். இந்த கொலை சிசிடிவி கேமராவில் பதிவானது. விசாரணையில், மாருதி ராவும், அவனது தம்பி ஷ்ரவன் ராவும், கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது.
மாருதி ராவின் வழிகாட்டுதலின்படி, தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை திட்டம் தீட்டப்பட்டது. பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.சி./எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ், மாருதி ரா., ஷ்ரவன் ரா., சிவா மற்றும் சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, நல்கொண்டா எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை வழங்கியது. மற்ற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.