இன்று காலை, புத்ராஜெயா சுங்கச்சாவடி அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பு சுவரில் மோதியதில் 40 வயதுடைய ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் குறித்த அவசர அழைப்பு காலை 7.42 மணிக்கு வருவதுடன், சைபர்ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். காலை 8.00 மணிக்கு அவர்கள் வந்தபோது, கார் விபத்துக்குள்ளாகியிருந்தது. ஓட்டுநர் அதன் இருக்கையில் சிக்கியிருந்தார், ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.