Offline

LATEST NEWS

இந்தோனேசியாவில் கடுமையான எரிமலை சீற்றத்தினால் ஏழு அனைத்துலக விமான சேவைகள் ரத்து
By Administrator
Published on 03/21/2025 19:05
News

சுற்றுலா தீவான ஃபுளோரஸில் உள்ள 1,703 மீட்டர் உயரமுள்ள இரட்டை சிகர எரிமலையான மவுண்ட் லெவோதோபி லக்கி-லக்கி (Mount Lewotobi Laki-Laki), கடந்த வியாழக்கிழமை 11 நிமிடங்கள் ஒன்பது வினாடிக்கு வெடித்து எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கடுமையான எரிமலை சீற்றத்தினால் ஏழு அனைத்துலக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தரையிலிருந்து கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தூரம் வரை கரும்புகை சூழ்ந்துள்ளதால் விமான நிலைய அதிகாரிகள் இந்த முடிவை முன்னெடுத்துள்ளனர்.

இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் பொருட்சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments