கோலாலம்பூர்: ஏப்ரல் 1 முதல், மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை, MASwings நிறுவனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்கள் பவர் பேங்குகளை எப்போதும் கையில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மலேசியா ஏர்லைன்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு அறிக்கையில், பயணிகள் பவர் பேங்குகளை விமானத்தில் எடுத்துச் செல்வது குறித்த புதுப்பிக்கப்பட்ட கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பவர் பேங்குகளை எப்போதும் உங்களுடன் வைத்து கொள்ள வேண்டும். மேலும் அவற்றை மேல்நிலைப் பெட்டிகளில் வைக்கக்கூடாது. விமானப் பயணத்தின் போது, அவற்றை நீங்கள் கைப்பையிலோ அல்லது இருக்கைக்கு அடியில் அல்லது உங்கள் முன் இருக்கை பாக்கெட்டில் வைத்து கொள்ளலாம் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 21) கூறியது. விமானம் முழுவதும் பவர் பேங்குகளை சார்ஜ் செய்வது அல்லது பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்பட்ட பொருட்கள் பவர் பேங்குகள், உதிரி லித்தியம்-அயன் பேட்டரிகளை எடுத்துச் செல்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று அது மேலும் கூறியது. விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கைகள் நடைமுறையில் உள்ளன என்பதை விமான நிறுவனம் வலியுறுத்தியது. மார்ச் 15 அன்று, மலேசியாவில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்கள் மற்ற நாடுகளுடன் சேர்ந்து விமானங்களில் பவர் பேங்க் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னர் பவர் பேங்குகள் செக்-இன் சாமான்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கைகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிய விதிகள் பயணிகள் அவற்றை எல்லா நேரங்களிலும் கைகளில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோருகின்றன. இந்த மாற்றம் ஜனவரி 2025 இல் தென் கொரியாவில் உள்ள கிம்ஹே அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் பூசானுக்குச் சொந்தமான ஒரு விமானம் பழுதடைந்த வெளிப்புற பேட்டரி பேக் தீப்பிடித்ததால் கடுமையாக சேதமடைந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து மலேசிய ஏர்லைன்ஸ் இந்த மாற்றத்தை அமல்படுத்தவுள்ளது.