Offline
டிக் டோகில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்துவது தவறு
By Administrator
Published on 03/23/2025 12:38
News

சமூக ஊடக உள்ளடக்கங்களுக்காக குறிப்பாக டிக் டோக் வீடியோக்களுக்கு ஆரம்பப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என ஆசிரியர்களுக்கு தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்ஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர்கள் வெளியிடும் படங்களையோ வீடியோக்களையோ பொறுப்பற்ற தரப்பினர், பாலியல் குற்றங்கள் உட்பட தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடும்.

எனவே மாணவர்களின் முகங்கள் அல்லது பெயர்கள் காட்டப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழலாம் என்றார் அவர்.

இது, மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளில் போய் முடியுமென, நெகிரி

செம்பிலான் நீலாயில் ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஃபாஹ்மி நினைவுறுத்தினார்.

Comments