அரச மலேசிய போலீஸ் படையின் 218 ஆவது தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து
அரச மலேசிய போலீஸ் படையின் 218 ஆவது தினத்தை முன்னிட்டு இன்று மார்ச் 25 ஆம் தேதி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
போலீஸ் படையினர், மக்களை குற்றச் செயல்களிலிருந்து பாதுகாக்கவும், ஒழுங்கை நிலைநிறுத்தவும், சட்டங்களை அமல்படுத்தவும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, எந்த நேரத்திலும், நாட்டிற்காகக் கடமையாற்றி வருகின்றனர்.
அந்த வீரர்களுக்கு தமது வாழ்த்துகளை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.