Offline
கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு… கணவர் தற்கொலை முயற்சி
By Administrator
Published on 03/31/2025 07:00
News

பெங்களூரு:மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பிளாட்டின் உரிமையாளர் இங்கு மர்மமான சூட்கேஸ் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள வீட்டின் குளியலறையில் மர்மமான ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டனர். அதனை திறந்து பார்த்த போலீஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் இருந்தது. உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். பெண்ணின் கணவரான ராகேஷ் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். அதனால் ராகேஷை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராகேஷ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும் புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் கொலைக்கான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments