Offline
குபாங் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஆட்டிசம் சிறுவனின் உடல் என நம்பப்படுகிறது
By Administrator
Published on 04/01/2025 19:01
News

மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன நான்கு வயது ஆட்டிசம் சிறுவன் ஃபயாத் அஃபான் ஃபக்ரியின் உடல் என நம்பப்படும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்கை குபாங் நதிக்கரையில் தேடிக்கொண்டிருந்த சிறுவனின் குடும்பத்தினரால் பிற்பகல் 3.15 மணியளவில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பாலிங் காவல்துறைத் தலைவர் அஸ்மி மொக்தார் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

குபாங்கின் கம்போங் லண்டக் பாயாவில் உள்ள நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை குடியிருப்பில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நாளை சுல்தானா பஹியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

ஆற்றங்கரையில் இருந்து உடலை மீட்க உதவுவதற்காக சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுல்கைரி மாட் தன்ஜில் தெரிவித்தார். புதிய தடயங்கள் எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்காததால், ஃபயாத் அஃபானைத் தேடும் பணி நேற்று மாலை நிறுத்தப்பட்டது.

பேச்சுத் திறன் குறைப்பாடுடைய  அந்தச் சிறுவன், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்று பின்கதவு வழியாகச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

Comments