கோலாலம்பூர்,யூன்லின் நிறுவனத் தயாரிப்பிலான 17 பொருள்கள் மலேசியாவின் பிரபல வணிகப் பேரங்காடியான என்.எஸ்.கே.வில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மொறு மொறுப்பான நிலக்கடலை, அரிசி பிஸ்கட்டுகள், பழ ஜெல்லிகள் உள்ளிட்ட பலவகையான திண்பண்டங்கள் இந்த உணவுப் பொருள்களில் அடக்கம். தைவானியநிறுவனமான யூன்லின் பலதரப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களின் அடிப்படையில் சுவையான உணவுப் பொருள்களை தயாரிக்கின்றன.யூன்லின் மாவட்டம் வளமான காய்கறி பயிரீட்டு நடைமுறைகளைக் கொண்டுள்ளது. தரமான உணவுப் பாதுகாப்பின் வழி இங்கு பயிரீட்டு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்லைன் . ஆஃப்லைன் விற்பனையை ஒருங்கிணைப்பதுடன், உலகளாவிய உணவுக் கண்காட்சிகளில் பங்கேற்று, என்.டி.100 மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. மேலும், வாழைப்பழம், முட்டைகோஸ் போன்ற பசுமை காய்கறிகளை ஜப்பான்,தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது.