Offline
சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன
By Administrator
Published on 04/12/2025 07:00
News

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பெட்டாலிங், கிளாங், சிப்பாங், உலு லங்காட்  கோம்பாக் ஆகிய இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் 0.6 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்ததாக அவர் கூறினார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது. பெட்டாலிங் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூச்சோங்கின் கம்போங் தெங்காவும் அடங்கும். அங்கிருந்து ஆறு பேர் புத்ரா ஹைட்ஸ் மசூதியில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு (பிபிஎஸ்) வெளியேற்றப்பட்டனர்.

பூச்சோங்கின் கம்போங் ஶ்ரீ அமானில் 30 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி 120 பேர் பாதிக்கப்பட்டதாக முக்லிஸ் கூறினார்.

Comments