Offline
மருத்துவமனைகளுக்கு நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்து பரவிய தீ பாதிப்பு இல்லை
By Administrator
Published on 04/12/2025 07:00
News

தாப்பா, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா சிலாங்கூரில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்து தீ பரவிய சம்பவத்தால் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் நேற்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அந்த பகுதியில் உள்ள மருத்துவ சேவை மையங்களில் இந்த சம்பவத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த வெடி விபத்து சம்பவத்திற்கும் மருத்துவமனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவ எரிவாயுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.

Comments