காசா: காசா பகுதியில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு 60,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA) அறிக்கையை மேற்கோள் காட்டி, முக்கியமான பொருட்களை வழங்க அனுமதிக்க நுழைவு வழிகளை மீண்டும் திறப்பதற்கான "அவசரத் தேவை"யை ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் வலியுறுத்தினார்.