ஜாலான் ஜெலாய்–பாசிர் பெசார் அருகே உள்ள Telco தொலைத்தொடர்பு கோபுரத்தின் உச்சியில் பராமரிப்புப் பணியாளர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று மாலை (ஏப்ரல் 14) 5.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், மயக்கமடைந்திருந்த பாதிக்கப்பட்டவர் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு வெற்றிகரமாக அந்தக் கோபுரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தது அங்கிருந்த மருத்துவக்குழுவால் உறுதிச்செய்யப்பட்டது என்று, தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அமிருதியன் சரிமான் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்களில் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று அவர் சொன்னார்.