Offline
தெலுங்கானா: காருக்குள் மூச்சு திணறி 2 குழந்தைகள் பலியான சோகம்
By Administrator
Published on 04/17/2025 07:00
News

ஐதராபாத்,தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் சிவெல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தமரகிரி கிராமத்தில் தனுஸ்ரீ (வயது 4) மற்றும் அபிநேத்ரி (வயது 5) ஆகிய 2 குழந்தைகள் பெற்றோருடன் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். உறவினர்களின் திருமண ஏற்பாடு பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக அவர்கள் சென்றுள்ளனர்.இதற்காக வீட்டில் அனைவரும் பேசி கொண்டு இருந்துள்ளனர். அப்போது, குழந்தைகள் 2 பேரும் வெளியே சென்று கார் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்தனர்.இதனை யாரும் கவனிக்கவில்லை. அவர்கள் 2 பேரும் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக காரில் இருந்துள்ளனர். இதில், மூச்சு திணறியதில் அவர்கள் 2 பேரும் மயக்கமடைந்து உள்ளனர்.இதன்பின்னர் குழந்தைகளை தேடி பெற்றோர் நாலாபுறமும் சென்று பார்த்துள்ளனர். இதில், காருக்குள் கிடந்த 2 பேரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் உயிரிழந்து விட்டனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த வீடே சோகத்தில் ஆழ்ந்தது.

Comments