கோலாலம்பூர், அல்லியார்ஹம் துன் அப்துல்லா அகமது படாவி, ஒரு தூய்மையான தலைவராக மட்டுமல்லாமல், மனித மூலதன மேம்பாட்டையும், மலேசியாவின் வெளிநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தியவர். ஐந்தாவது பிரதமராக, நாட்டின் கண்ணியத்தை உலகளவில் உயர்த்த முக்கிய பங்கு வகித்தார்.
பேராசிரியர் டத்தோக் இலாங்கோ, துன் அப்துல்லாவின் தலைமையில் 2005ஆம் ஆண்டு ஆசியான் சாசனம் உருவாக்கப்பட்டது எனக் கூறினார். வெளியுறவுத் துறையில், அவர் சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தினார்.முன்னாள் தூதர் டான் ஸ்ரீ ஹஸ்மி, துன் அப்துல்லாவை கூட்டு மனப்பான்மை கொண்ட புத்திசாலி தலைவராகப் புகழ்ந்தார். தேசிய இதய நிறுவனத்தில் திங்கள்கிழமை காலமான துன் அப்துல்லா, செவ்வாய்க்கிழமை தேசிய ஹீரோக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.