யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) டெங்கிள் மாணவர்கள் KKK (கேகேகே) போல உடையணிந்த வீடியோவை போலீசார் இனப் பாகுபாடு குறித்த விசாரணையாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ “சமகால உலகளாவிய மற்றும் சட்ட சிக்கல்கள்” என்ற பாடத்துக்கான பணியின் ஒரு பகுதியாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் KKK அமைப்பால் நடந்த இன ஒடுக்குமுறையை விளக்கும் வகையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டது என்றும், இனப் பாகுபாடு மற்றும் புதிய சட்டங்களைப் பற்றி புரிதல் தருவதே நோக்கம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோவைப் பகிரும் போது தவறான தகவல்களை பரப்பாமல் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இது கல்வி சூழலில் நடத்தப்பட்ட செயலாகும் என தெரிவித்துள்ளது.