செபாங், செபாங் KLIA விமான நிலையத்திற்கு அருகேயுள்ள எண்ணெய் நிலையமொன்றில் தனது புரோட்டோன் சாக்கா காரை வெடித்ததால், e-hailing ஓட்டுநர் பதறிப் போனார்.நேற்றிரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்த அசம்பாவிதத்தின் வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலானது.எனினும் அதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.பின்னர் போலீசார் விசாரணையில், காரின் பேட்டரி வெடித்ததே அச்சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.மேல் நடவடிக்கைகளுக்காக, அந்த காரை போலீசார் புகார் செய்திருக்கின்றனர்.அந்த எண்ணெய் நிலையத்தில் வெடித்ததாகக் காட்டு 2 வீடியோக்கள் முன்னதாக வைரலானது.