Offline
1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் – வழக்கு தொடர்ந்து வென்ற பெண்
By Administrator
Published on 04/17/2025 07:00
News

பிஜீங்,சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் வாங் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் பல சமூகதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியதால் வாங் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல், ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்று வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வாங் (வயது 28), தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார் அளித்து, அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்நிறுவனம் எந்த ஒரு எச்சரிக்கையும் கொடுக்காமல் திடீரென அவரை வேலையில் இருந்து நீக்கியது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.எனவே, அவருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

Comments