Offline
265 பேர் உயிரிழந்த எயர் இந்தியா விபத்து: மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன
By Administrator
Published on 06/14/2025 09:00
News

லண்டன் நோக்கி புறப்பட்ட எயர் இந்தியா விமானம் அஹமதாபாதில் வியாழனன்று வீழ்ந்தது. விபத்தில் விமானத்திலும் தரையிலும் இருந்த 265 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளார்.

விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே ரெஸிடென்ஷியல் பகுதியில் விபத்துக்குள்ளானது. டிஎன்ஏ மூலம் உடல்களைக் கண்டு பிடிக்க உறவினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி இதை "மிகுந்த வேதனையளிக்கும் விபத்து" என கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments