இரானுக்கு அணுகுண்டு இருக்கக்கூடாது. பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்," என்று டிரம்ப் கூறினார். "இரான் பதிலடி செய்தால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பாதுகாக்க தயார்,"என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா ஒரு முக்கிய மேற்கு ஆசிய கூட்டாளிக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ:"அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடவில்லை. நமது முன்னுரிமை, அமெரிக்கப் படைகளை பாதுகாப்பது. இரான், எங்கள் சொத்துகள் அல்லது பணியாளர்களை தாக்கக்கூடாது," என்றார்.