கோலாலம்பூர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதி இல்லாமல் புகுந்த சீன யூடியூபர் லி ஜெச்சென் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM800 அபராதம் விதித்தது. ஜூலை 9 அன்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக அவர் அங்குள் நுழைந்த போது போலீசார் கைது செய்தனர். பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்ட லிக்கு, அபராதம் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைதண்டனை விதிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.