இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, மலேசியாவில் மொத்தம் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று துணை அமைச்சர் டத்தோக் ஸ்ரீ நோரைனி அஹ்மட் தெரிவித்தார். இதில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு பெண்கள் எனக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் உடல் தாக்குதல்களாக மட்டுமல்லாமல், மன அழுத்தம் அளிக்கும் வகையிலும் இடம்பெறுகின்றன.
திரெங்கானு மாநிலத்தில் மட்டும் இந்த காலப்பகுதியில் 104 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் (130 வழக்குகள்) ஒப்பிடுகையில் இது குறைவாக இருந்தாலும், நிலைமை இன்னும் கவலையைத் தூண்டுவதாக இருக்கிறது.பல்வேறு சம்பவங்களில் பெண்கள் தாங்கள் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதை உணர முடியாமலே இருக்கின்றனர் என்றும், இது பெரும்பாலும் நெருக்கமான உறவுகளிடமிருந்து தான் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பெண்கள் மீள உருமாற்றமடைந்து, தன்னம்பிக்கையுடன் வாழும் வகையில் “Aku Wanita @ KRT” திட்டம் மற்றும் ‘K-Chat’ குழு வழியாக மன உளவியல் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.