ஜூலை 16 காலை காராக் விரைவுச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், கெந்திங் செம்பாவை அடுத்து வெளியேறும் பகுதியில் ஒரு 10 டன் லோரி 90% வரை எரிந்து சேதமடைந்தது. காலை 7.24 மணிக்கு பேரிடர் தகவல் வந்ததும், 10 தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது.