மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுடியோன் இஸ்மாயில் இன்று வெளியிட்ட அதிர்ச்சிக்கரமான தகவலின்படி, மூன்று மாத குழந்தை ஒன்று பாலியல் வன்முறைக்கு ஆளானதோடு, அந்தக் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்து விற்பனையும் செய்யப்பட்டுள்ளதாம். இது மனிதத்தன்மைக்கு மோசமான அவமதிப்பு எனக் கண்டித்த அவர், இந்த தகவல் நள்ளிரவில் 12.30 மணிக்கு கிடைத்தது என்றும், அதுவே அவரை உளமுழுதும் பதறவைத்ததெனத் தெரிவித்தார். மேலும், இது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், மேலதிக விவரங்களை பகிர முடியாது என்றும் அவர் கூறினார்.