Pusat Bandar Putra Permai பகுதியில் நான்கு மாடி அபார்ட்மெண்ட் ஒன்றில் நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மையம் கண்டுபிடிக்கப்பட்டது. 741 வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்பட்ட போது, 496 பேர் செல்லுபடியாகாத ஆவணங்களால் கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கை மலேசிய குடிநுழைவு துறை, சுபாங் ஜெயா மாநகர சபை மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்டது. சம்பவம் Immigration Act 1959/63, Passport Act 1966, Anti-Trafficking மற்றும் Smuggling சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்பட்டது. சிலாங்கூரில் மேலும் 4 இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். PRM 2.0 திட்டத்தின் மூலம் சட்டவிரோத குடியேறிகள் RM520 செலுத்தி தங்கள் நாடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.