நெகிரி செம்பிலான், மந்தின் ஸ்ரீ பால்மா வில்லா பகுதியில் உள்ள பல்பொருள் கடையில், 11 வயது சிறுவனை தாக்கிய 30 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சிறுவன் திருடியதாக சந்தேகித்து, அவர் முகம் மற்றும் கால்களில் உதைத்து மிதித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.சம்பவம் சிசிடிவி-வில் பதிவாகியிருந்ததுடன், மற்றொரு வாடிக்கையாளர் சாட்சியம் அளித்துள்ளார்.மாற்றுத்திறனாளி அட்டை வைத்துள்ள சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சனை இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.சிறுவன் சிகிச்சைக்கு பிறகு வெளியேறிய நிலையில், சம்பவம் தொடர்பாக 323 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஜூலை 19 வரை தடுப்புக் காவலில் உள்ளார்