ஜோகூரின் பொந்தியானில் நேற்று காலை 11.30 மணியளவில், நண்பர்களுடன் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மீது பனைமரம் திடீரென முறிந்து விழுந்தது.இந்த விபத்தில் உடல் நசுங்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என மாவட்ட காவல் தலைவர் முகமட் ஷோஃபீத் தாயிப் தெரிவித்தார்.இது திடீர் மரணமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.