இஸ்தானா நெகாராவின் அரண்மனை நிர்வாக அலுவலராக 2024 முதல் பணியாற்றி வரும் டத்தோக் சைலானி ஹாசிமின் ஓய்வை முன்னிட்டு, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவருக்கு நன்றி கடிதமும் நினைவுப் பரிசும் வழங்கினார்.சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவருடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்காக பேரரசர் ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை ஓய்வுபெறும் சைலானிக்கு மாற்றாக டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.பேரரசரிடம் நேரடியாக நன்றி பெறும் வாய்ப்பு, மிகுந்த பெருமை என இஸ்தானா வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.