இன்று காலை MEX நெடுஞ்சாலையில் கோலாலம்பூரை நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.