Offline
Menu
AI துறையில் சாதனைப் படைத்த TNB – ASEAN புத்தாக்க விருது வெற்றி.
By Administrator
Published on 07/17/2025 09:00
News

மலேசியாவின் முன்னணி மின்சார நிறுவனமான Tenaga Nasional Berhad (TNB), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொண்ட முன்னேற்பாட்டு பராமரிப்பு திட்டத்துக்காக 2025ஆம் ஆண்டுக்கான ASEAN Innovation Business Platform புத்தாக்க விருதை வென்றுள்ளது.இந்த AI திட்டம், மண்ணடியில் உள்ள 11kV கேபிள்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பழுதுகளை 80% துல்லியத்துடன் கணித்து, பழுது ஏற்படும் வாய்ப்புகளை 15-20% வரை குறைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் சேவையும் மின்சாரம் விநியோக தரமும் மேம்பட்டுள்ளன.சிலாங்கூரில் சோதனையாக தொடங்கிய திட்டம், TNB உள்நாட்டு வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு, Malaysia Smart Utility 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.Petronas, AirAsia, Sime Darby உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை முந்தி TNB இந்த விருதை வென்றுள்ளது. மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் மின் விநியோக நம்பகத்தன்மையை உயர்த்திய இந்த முயற்சி, மலேசியாவின் AI வளர்ச்சிக்கு சிறந்த முன்னுதாரணமாக TNB தெரிவித்துள்ளது.

Comments