மலாக்கா பாடாங் தெமுவில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் 6 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது என சந்தேகம் உள்ளது. பராமரிப்பாளர், குழந்தை முகம் நீலமாக குப்புறக்கிடந்ததை கவனித்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் குழந்தைக்கு மீண்டும் உயிர்க்காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டும், உயிர் வாழவில்லை. இதுகுறித்து 2001 குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.அதே மையத்தில் 3 வயது சிறுமி ஒருவரின் இடது காதில் பராமரிப்பாளர் ஒருவர் அடித்து காயம் செய்ததற்கும் புகார் வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயார் அவளை மருத்துவமனையில் அழைத்து சென்று, பிறகு போலீசில் புகார் அளித்தார்.