மலேசியா-நியூசிலாந்து இடையிலான பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று துணை பிரதமர் அஹ்மட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து NEMA நிறுவனத்துக்கு விஜயம் செய்த அவர், தகவல் பகிர்வு, மீட்பு பயிற்சி, பேரிடர் சமாளிப்பு ஒத்திகை போன்றவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.மேலும், ஹலால் தொழில்துறையும், மலேசிய பண்ணை தயாரிப்புகளின் இறக்குமதி மற்றும் கட்டுமான முதலீடுகள் குறித்தும் இருநாட்கள் ஆலோசனை நடத்தினதாக தெரிவித்தார்.