விரைவில் நியமிக்கப்படவுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து ஊகங்கள் பரப்பாமல், முழுமையான தகவலை காத்திருக்குமாறு சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அனைத்து தரப்பினருக்கும் கேட்டுக் கொண்டார். 269ஆவது ஆட்சியாளர் மாநாட்டில் புதிய தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் சபா-சரவாக் தலைமை நீதிபதிகள் நியமனத்தைப் பற்றி கலந்துரையாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.நீதித்துறை நியமனங்கள் பிரதமர் ஆலோசனையோடு, ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்து மன்னரால் நடைபெறுவதாகவும், இந்த செயல்முறை சட்டம் மற்றும் நீதித்துறையின் தங்கியதலை பாதுகாப்பதற்காக வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.நியமனங்களைப் பற்றி முழுமையான உண்மை தகவலை பெறாமல் ஊகங்கள் மற்றும் எதிர்மறையான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். சமீபத்தில் சில உயர்நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் உண்டான காலியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும், அதனால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார்.