மலாக்காவின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில், ‘Smart AI Tourism Melaka’ திட்டம் 2025 செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இந்த திட்டம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், சுற்றுலா பயணிகள் மலாக்காவின் முக்கிய இடங்களை எளிதாக அறிந்து அனுபவத்தை சிறப்பாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் பல மொழிகளில் தகவல் வழங்கும் மொழிபெயர்ப்பாளராகவும், இணையதளம், QR குறியீடுகள், இருதரப்பு தகவல் பரிமாற்ற வசதிகளுடன் செயல்படும். Melaka ICT Holdings மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மலாக்கா மாநிலம் தற்போது 99.97% 4G மற்றும் 89.7% 5G இணையத்துடன் கூடியது. 2027க்குள் அனைத்து மாகாணங்களிலும் 100% 4G, 5G வசதி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.