கோலாலம்பூர்: பிரதமர் அன்வாரின் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டார், வரவிருக்கும் “Turun Anwar” பேரணி நீதிக்காக அல்ல, அரசியல் லாபம் பெறும் சிலரின் சூழ்ச்சியாம் என கூறினார்.போராட்டம் பொதுமக்களின் விரக்தி போல உருவானாலும், உண்மையான நோக்கம் வேறுவிதமாக உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் வாக்குப் பெட்டியில் தோல்வியை மாற்ற முயற்சிக்கின்றனர்.அவர், ஜனநாயகத்தை அவமதிப்பது மாற்றத்தை தராது; மாற்றம் வேண்டுமெனில் அடுத்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.