சிரியா தலைநகரான டமாஸ்க்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்தார். இது 1974 ஒப்பந்தத்தை மீறும் தாக்குதல் என்றும், சிரியா மக்களுக்கு அமைதி தேவை என்றும் அவர் தெரிவித்தார். மலேசியா சிரியா மக்களுடன் உறுதியாக நிற்கும் என்றும், இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபர் அலுவலகம் சேதமடைந்தது, தென் சிரியா சுவைதா மாகாணத்திலும் தாக்குதல் நடந்தது.