நேற்று (16 ஜூலை 2025) தங்காக் மாவட்டத்தில், 55 வயது மலாய் பெண் ஒருவர், டிக்டாக் செயலியில் பரிசு வெல்வோம் என கூறி மோசடியில் RM26,060 இழந்ததாக போலீசில் புகார் செய்தார்.அவர் ஒரு போட்டியில் பங்கேற்பதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்று நம்பி, சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு 6 வங்கி கணக்குகளுக்கு 12 முறை பணம் அனுப்பியுள்ளார்.தங்காக் போலீசார் இந்த விவகாரத்தை சட்டத்தின் பிரிவு 420 கீழ் விசாரித்து வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் கிடைக்கும்.பொதுமக்கள் இணைய மோசடிகளில் எச்சரிக்கையாக இருப்பதே அவசியம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.