பிரான்ஸ் கடன் சுமையை குறைக்க, பிரதமர் பிரான்சுவா பய்ரூ 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டத்தில் முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அவர், நாட்டின் கடன் நிலை ஒரு “சாபம்” என விமர்சித்து, அதை சமாளிக்க அரச செலவுகளை குறைப்பதோடு, பொதுவிடுமுறைகளில் இரண்டை ரத்து செய்யும் யோசனை குறித்து கூறினார்.11 தேசிய விடுமுறைகளில், ஈஸ்டர் திங்கள் மற்றும் மே 8 (உலகப்போர் முடிவை நினைவு கூறும் நாள்) விடுமுறைகள் நீக்கப்படலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட் போக்கு 5.4% முதல் 4.6% ஆக குறைக்கப்படும் என்றும், 2029க்குள் ஐரோப்பிய ஒப்பந்த விதிமுறைப்படியான 3% அளவுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.அதேசமயம், பாதுகாப்பு செலவுகள் மட்டும் உயர்த்தப்பட இருக்கிறது. பணக்காரர்களிடம் அதிகமாக வசூலிக்கப்படும் என்றும், பெரும்பான்மையிடம் குறைவாகவே பெறப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.இரண்டு விடுமுறைகளை ரத்து செய்தால் அரசுக்குப் பல பில்லியன் யூரோ வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.ஆனால், எதிர்க்கட்சிகள் இது நாட்டின் பண்பாட்டையும் வரலாறையும் கெடுக்கும் நடவடிக்கையென கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.