Offline
விமான விபத்தால் குறைத்த விமானங்கள்: எயர் இந்தியா சில சர்வதேச சேவைகளை மீண்டும் தொடக்கம்.
By Administrator
Published on 07/18/2025 09:00
News

ஜூன் 12 அன்று அஹமதாபாத்–லண்டன் விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, எயர் இந்தியா சில சர்வதேச சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது, ஆகஸ்ட் 1 முதல் அவை கட்டுப்பாடாக மீண்டும் தொடங்கப்பட உள்ளன.அஹமதாபாத்–லண்டன் ஹீத்ரோ வழித்தடத்தில் வாரத்திற்கு 3 முறை விமானம் இயக்கப்படும். டெல்லி–பாரிஸ், டெல்லி–மிலான், டெல்லி மற்றும் மும்பை–நியூயார்க் சேவைகளும் சற்றே குறைக்கப்பட்டுள்ளன. முழுமையான சேவை அக்டோபர் 1, 2025 முதல் மீண்டும் தொடங்கும் என எயர் இந்தியா தெரிவித்துள்ளது.

Comments