Offline
பெல்ஜிய இலக்ட்ரோ இசை விழாவில் தீ விபத்து: பிரதான மேடை நாசம்.
By Administrator
Published on 07/18/2025 09:00
News

பெல்ஜியாவின் ஆண்ட்வெர்ப் அருகே நடைபெறும் உலகப்புகழ்பெற்ற Tomorrowland இசை விழாவின் முக்கிய மேடை, விழா தொடங்கும் முன்னதாகவே தீக்கிரையாகி முற்றிலும் அழிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விழாக்கர்கள் தெரிவித்தனர்.இந்த திடீர் சம்பவத்தையும் பொருட்படுத்தாமல், அடுத்த இரண்டு வார இறுதிகளில் விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், "DreamVille" முகாம் வியாழனன்று திறக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.Boom நகரில் நடைபெறும் இந்த விழாவுக்கு சுமார் 100,000 பார்வையாளர்கள் வர உள்ளனர். David Guetta, Armin Van Buuren, Lost Frequencies, Charlotte de Witte ஆகிய பிரபல DJ க்கள் இசை நிகழ்வுகளை நடத்த உள்ளனர். விழாவின் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை தீக்கிரையான "Main Stage" மற்றும் "Freedom Stage" மேடைகளில் நடைபெற இருந்தன.தீயை கட்டுப்படுத்த சில நூறு தீயணைப்புத் துறையினர் போராடினர். இது விபத்தால் ஏற்பட்டதென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆண்ட்வெர்ப் அதிகாரிகள் தெரிவித்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த விழா தற்போது பிரான்ஸில் குளிர்கால பதிப்பும், பிரேசிலில் ஒரு பதிப்பும் கொண்ட உலகளாவிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.

Comments