ஏமனில் நர்சாக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா, தலால் மஹ்தி என்ற நபரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த நிலையில், இந்திய அரசு, மத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நடத்திய தொடர்ந்து முயற்சியால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.ஏமனின் இஸ்லாமிய சட்டப்படி, பாதிக்கப்பட்டரின் குடும்பம் ரத்தப்பணம் ஏற்றால் தண்டனை குறைக்கலாம். ஆனால், கொல்லப்பட்ட மஹ்தியின் சகோதரர் அப்துல் பதே, நடந்தது மன்னிக்க முடியாதது என தெரிவித்து, ரத்தப்பணத்தை நிராகரித்துள்ளார். இதனால், பிரியாவை விடுவிக்கும் முயற்சிக்கு மீண்டும் தடையாக இது மாறியுள்ளது.முன்னணி தரப்புகளின் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், நிமிஷா பிரியாவின் விடுதலை இன்னும் உறுதியற்ற நிலைக்குள் சென்றுள்ளது.