ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாண்டுகளாக தொடர்கிறது. நேட்டோவில் உக்ரைன் சேர்வதற்கு எதிராகவே ரஷ்யா இந்த போரை தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் எண்ணெய், ஆயுதம் வாங்கி வர்த்தகம் செய்து வருகின்றன. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா போருக்கு 50 நாளில் முடிவுக்கு வராவிட்டால் 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். போரை முடிக்க பலமுறை புடினுடன் பேசியுள்ள டிரம்ப், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து, நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடர்ந்தால் கடும் பொருளாதார தடை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.