இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மிண்டி ராஸ்முஸன் (47) மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் செப் கான் (31) பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து, இஸ்லாமிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். மிண்டி பாகிஸ்தான் சென்று இஸ்லாம் மதத்தை ஏற்று "சுலேகா" என பெயர் மாற்றி கொண்டார். குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஒரு அழகான நாடு என்றும் சுலேகா தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்றது தனிப்பட்ட முடிவாகும் என்றும், அதில் கட்டாயம் ஏதுமில்லை என்றும் தம்பதியர் கூறினர்.