கடந்த மாதம் கெரிக் பகுதியில் 15 யூபிஎஸ்ஐ (பல்கலைக்கழக பெண்டிகன் சுல்தான் இத்ரிஸ்) மாணவர்கள் உயிரிழந்த பயங்கர விபத்தில், மோசமான சாலை நிலைமை முக்கிய காரணமாகக் காணப்படுகிறது.
மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட தொடக்க அறிக்கையின் படி, வளைந்த சாலைப் பகுதியில் பார்வை வரம்பு குறைவாக இருந்தது மற்றும் சாலை குறியீடுகள் மங்கியிருந்தன. இது விபத்துக்கான ஆபத்தை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது:
"விபத்து நடந்த இடத்தில் மேற்கொண்ட பார்வையிடலில், இரட்டை கோடுகள் மற்றும் சாலையருகு கோடுகள் போன்ற அனைத்து சாலை குறியீடுகளும் தெளிவாக இல்லை அல்லது மங்கியிருந்தன. இது சாலையின் மேற்பரப்பு குலை போனதாலும், பராமரிப்பு இல்லாமையாலும் ஏற்பட்டு இருக்கலாம்."
தெளிவற்ற பார்வை நிலை, குறிப்பாக வேகமாக ஓடும் அல்லது கனரக வாகனங்கள் முந்தும் நேரங்களில் நேருக்கு நேர் மோதி விபத்துகளுக்கு காரணமாக இருந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.