சபாவில் உள்ள பள்ளி விடுதியில் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த படிவம் ஒன்று மாணவி ஜாரா கைரினா மகாதீர் சம்பவம் தொடர்பாக, போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றது கல்வி அமைச்சகம்.
கல்வி அமைச்சர் பாத்லினா சிடிக் கூறியதாவது:
"இந்த சம்பவம் தற்போது போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளுடன் கல்வி அமைச்சகம் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும். மக்கள் எதுவும் ஊகிக்க வேண்டாம்; இது விசாரணையை பாதிக்கக் கூடும். குடும்பத்தின் தனிமையை மதித்து, அதிகாரிகள் தங்களது விசாரணையை நேர்மையாக செய்ய அனுமதி வழங்க வேண்டும். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்."
இந்த சம்பவம் எஸ்எம்ஏ துன் டத்து முஸ்தபா லிமாவான் பள்ளியில் நடந்தது.
நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பாத்லினா, குடும்பத்தின் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் குடும்பத்தை நேரில் சந்தித்ததாகவும், அனைத்து தேவையான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சபா கல்வித்துறை உடனடி உதவிகளை வழங்கியதாகவும், அதில் மனநல ஆதரவும் அடங்கும் என அவர் கூறினார்.
இந்த வழக்கு, பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.