முன்னாள் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக பரப்பப்பட்ட தகவல்களில் எந்த உண்மையம் இல்லை எனவும், புதிய 8 மேன்முறையீடு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 14 உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜூலை 28ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர் எனவும் கூறியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராகிம்.
இந்த நியமனம் நீதித்துறை நியமனக்குழு (JAC) மூலம் பரிசீலிக்கப்பட்டு, மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு, பேரரசரின் ஒப்புதலை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
“எனது விருப்பப்படி நீதிபதிகளை நியமிக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆட்சியாளர்களின் ஆலோசனை மற்றும் பேரரசரின் ஒப்புதல் அவசியம். அதனால் தான் விரைவாக அறிவிக்க முடியவில்லை,” என்று அவர் விளக்கினார்.
மேலும், எவரும் நீக்கப்படவோ பதவிநீக்கம் செய்யப்படவோ இல்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு புதிய நியமனங்கள் மிக நுட்பமாகவும் அரசமைப்பை மதிக்கவும் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.