அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பயிற்சி மையத்தில் வெடிப்பு – மூவர் உயிரிழப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த வெடிப்பில் மூன்று அதிகாரிகள் உயிரிழந்தனர். இது தீவிரவாதம் அல்ல, “துயரமான விபத்து” என அதிகாரிகள் தெரிவித்தனர். FBI, ATF, LAPD வெடிகுண்டு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 1857க்கு பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் துறைக்கு இது மிகப்பெரிய உயிரிழப்பாகும்.