இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி தடை நீட்டிப்பு
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளி தடையை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது
இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இதன் விளைவாக, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு வான்வெளி தடையை விதித்தது.
இதேபோல், இந்தியா பாகிஸ்தான் விமானங்களுக்கு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைதனது வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.