கோலாலம்பூர்:
அடுத்த ஆண்டுக்கான தேசிய சேவை பயிற்சி திட்டம் (PLKN) 3.0இல் 8,000க்கும் மேற்பட்ட இளையோரை பங்கேற்கச் செய்வதை தேசிய சேவை பயிற்சித் துறை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ யாகோப் சமிரான் கூறுகையில், இந்த எண்ணிக்கை நெகிரி செம்பிலானில் கெமாஸ், சரவாக் மாநிலத்தின் கூச்சிங்கில் செமந்தான் மற்றும் சபா மாநிலத்தின் தவாவில் குகுசான் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முகாம்களின் பங்கேற்பையும் உள்ளடக்கியதாகும்.
இது தொடர்பாக இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான PLKN 3.0 இளையோர் பதிவு நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.