கோத்த கினாபாலுவின் கெபாயனில் உள்ள ஒரு கூரியர் சேவை வளாகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில், 1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள 20.7 கிலோ கெத்தமைனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை நடந்த சோதனையின் போது, லம்போர்கினி அவென்டடோர் மற்றும் நான்கு சொகுசு வாகனங்கள், கணினிகள், RM3.18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிற மதிப்புமிக்க பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக சபா போலீஸ் கமிஷனர் ஜௌதே டிகுன் தெரிவித்தார்.
சோதனையின் போது 20 பாக்கெட்டுகள் கொண்ட கெத்தமைனை இரண்டு சாக்குகளில் கண்டுபிடித்தோம். பின்னர் முக்கிய சந்தேக நபரான ஒருவரை கைது செய்தோம். முக்கிய சந்தேக நபரை விசாரித்ததில் செப்டம்பர் 5 ஆம் தேதி ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் பெர்னாமா அறிக்கையில் கூறினார்.